மனிதன் பட பாணியில் கார் மோதி 4 பேர் கொலை!!
மனிதன் பட பாணியில் கார் மோதி 4 பேர் கொலை!!

ஹைதராபாத்தில் நடைபாதையில் அமர்ந்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
கரீம்நகரில் கமான் சந்திப்பு அருகே பிரதான சாலையில் வந்த கார் ஒன்று சாலை டிவைடர் மீது மோதி நடைபாதையில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் மீது மோதியதில் 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
விபத்து நடந்த உடன் காரில் இருந்த டிரைவர் மற்றும் காரில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். விபத்து ஏற்படும் போது காரை ஓட்டிச் சென்றவர் குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் சுனிதா, லலிதா மற்றும் ஜோதி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கக் கோரி ஏழை குடும்பங்களைச் சேர்ந்த இறந்தவர்களின் உறவினர்கள் விபத்து நடந்த பகுதி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
newstm.in

