Theme Check

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது கட்டாய பாஸ்டேக்..!

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது கட்டாய பாஸ்டேக்..!

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது கட்டாய பாஸ்டேக்..!
X

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தொகை காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. நேரமும் வீணாகிறது. இப்பிரச்சினையை தவிர்க்க மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் முறையான ‘பாஸ்டேக்’ முறை, 2016ல்அறிமுகப்படுத்தப்பட்டாலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் ‘பாஸ்டேக்’ ஸ்டிக்கர்கள் கிடைக்கும். குறிப்பிட்ட தொகை செலுத்தி அந்த ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில் ஒட்டிக்கொள்ள வேண்டும்.

சுங்கச்சாவடிகளை வாகனம் கடக்கும்போது, சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவி மூலம் அந்த வாகனத்துக்கான கட்டணம் தானியங்கி முறையில் கழித்துக்கொள்ளப்படும். இதனால், சுங்கச்சாவடிகளில் நிற்காமல் பயணத்தை தொடரலாம். ‘இதனை மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

பாஸ்டேக் இல்லாமல் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it