வெறித்தனம்.. களத்தில் இறங்கிய ராய் லட்சுமி !

வெறித்தனம்.. களத்தில் இறங்கிய ராய் லட்சுமி !

வெறித்தனம்.. களத்தில் இறங்கிய ராய் லட்சுமி !
X

நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். அப்படம் அவரை மேலும் உயர்த்தியது என்று கூறலாம்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. நாட்கள் செல்ல செல்ல கவர்ச்சி வேடங்களுக்கு மாறினார். இதனால் அவரது மார்க்கெட்டும் உயர்ந்தது. அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்தார்.

இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார். பேய் வேடத்தில் அப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி.

கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். எனினும் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்ததால் தற்போது மாடல் பக்கம் சாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அவர் ஜிம்மிலேயே கடுமையாக உழைத்து வருகிறார். அங்கு கடுமையாக ஒர்க் அவுட் செய்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளாரா? அதனால் தான் அப்படத்திற்கு ஏற்றப்படி உடலை மாற்றுக்கிறாரா என ரசிகர்கள் கமாண்ட் செய்து கேள்விகேட்டு வருகின்றனர் .

newstm.in

Tags:
Next Story
Share it