Theme Check

மன்மோகன் சிங் சொன்னதை நாங்க செய்தோம்! பிரதமர் மோடி விளக்கம்!

மன்மோகன் சிங் சொன்னதை நாங்க செய்தோம்! பிரதமர் மோடி விளக்கம்!

மன்மோகன் சிங் சொன்னதை நாங்க செய்தோம்! பிரதமர் மோடி விளக்கம்!
X

வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன் சொன்னதைத் தான் நாங்கள் செய்துள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா தற்போது வளர்ச்சி பாதையை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டுள்ளது. இதனால்தான் உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியுள்ளது.

குடியசு தலைவரின் உரை வலிமையானது என்பதால் அதை கேட்காதவர்களிடம் கூட அவை சென்று பெரும் தாக்கத்தை ஏற்பட்டுள்ளது. ஆனால், குடியரசு தலைவரின் உரையை கேட்காமல் பலர் விமர்சம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாதது. இந்தியா தற்போது வாய்ப்புகளுக்கான நாடாக மாறிவிட்டது. இதனால், உலகமே இந்தியாவின் மீது பார்வை திரும்பியுள்ளது.

அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக விளக்கேற்றும் நிகழ்வை கூட சிலர் கிண்டல் செய்தனர். அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், நாங்கள் மக்கள் பணியை மட்டுமே செய்தோம்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளோம். இது இந்தியா மீது நம்பிக்கையை வளர்த்துள்ளது.

வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்தான் சொன்னார். அதை நாங்கள் தற்போது செய்துள்ளோம். விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசுவோர், சிறு, குறு விவசாயிகளை மறந்து விடுகின்றனர். விவசாயிகள் நலன் கருதி இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் சிறு விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது மாபெரும் சாதனை.

புதிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் வேண்டும் என்று போராடி வரும் விவசாயிகளுடன் பேச நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆனால், புதிய வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் பக்கம் எந்தவித நியாயம் இல்லை என்றார்.

Tags:
Next Story
Share it