Theme Check

ஓய்வு பெற்றபின் மகிழ்ச்சியான செய்தி கூறிய மரியா ஷரபோவா !!

ஓய்வு பெற்றபின் மகிழ்ச்சியான செய்தி கூறிய மரியா ஷரபோவா !!

ஓய்வு பெற்றபின் மகிழ்ச்சியான செய்தி கூறிய மரியா ஷரபோவா !!
X

பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தன்னுடைய ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தியை கூறி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

டென்னிஸ் உலகில் பெரும் நட்சத்திரமாக விளங்குவர் ரஷ்யாவைச் சேர்ந்த வீராங்கனை மரியா ஷரபோவா. 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற இவர் சா்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தார். அப்போது அவருக்கு வயது 32. நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற 10 வீராங்கனைகளில் ஷரபோவாவும் ஒருவர்.

maria sharapova

டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் 21 வாரங்கள் இருந்தார். 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் மகளிர் ஒற்றையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இவர், அலெக்ஸாண்டர் கைக்ஸைக் காதலித்து வரும் நிலையில் தனது 35ஆவது பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது முதல் குழந்தையை விரைவில் எதிர்பார்ப்பதாகக் கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து தொழிலதிபரான கைக்ஸும் ஷரபோவாவும் 2018 முதல் காதலித்து வருகிறார்கள். கடந்த வருட டிசம்பரில் தங்களுடைய திருமண நிச்சயதார்த்தம் பற்றி இருவரும் அறிவித்தார்கள்.


newstm.in

Next Story
Share it