விடிந்தால் திருமணம்.. மணப்பெண்ணின் செயலால் அதிர்ந்த மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தினர்
விடிந்தால் திருமணம்.. மணப்பெண்ணின் செயலால் அதிர்ந்த மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தினர்

திருமணத்திற்கு முதல் நாள் புதுமண பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் தேவதர்ஷினி (21). இவருக்கும் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கு இரு குடும்பத்தினரும் தயாராகி வந்தனர். இந்த நிலையில் புதுப்பெண் தேவதர்ஷினி தனது வீட்டில் உள்ள அறையில் சென்று கதவை மூடிக்கொண்டார்.

நீண்ட நேரமாக அறையை திறக்காததால் குடும்பத்தினர் உடைத்துச்சென்று பார்த்தப்போது, புதுப்பெண் தேவதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் மணமகன் வீட்டாரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தூக்கில் தொங்கிய தேவதர்ஷினியின் உடனை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த தேவதர்ஷினியின் இறப்புக்கு காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புதுப்பெண்ணின் உறவினர்கள், தோழிகளிடம் விசாரணை நடத்தினர். அதேபோல் திருமணம் செய்யய இருந்த புதுமாப்பிள்ளையிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
newstm.in

