ஷூட்டிங் ஸ்பாட்டில் திருமணம்... கரம்பிடித்த `பூவே பூச்சூடவா' ரேஷ்மா - மதன் !

ஷூட்டிங் ஸ்பாட்டில் திருமணம்... கரம்பிடித்த `பூவே பூச்சூடவா' ரேஷ்மா - மதன் !

ஷூட்டிங் ஸ்பாட்டில் திருமணம்... கரம்பிடித்த `பூவே பூச்சூடவா ரேஷ்மா - மதன் !
X

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் ரேஷ்மா முரளிதரன். இவரும் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த மதன் பாண்டியனும் காதலித்து வருவதாக கூறப்பட்டது.

reshma news

இதனாலும் இந்த சீரியல் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. கேரளாவை சேர்ந்தவர் நடிகை ரேஷ்மா முரளிதரன். முதலில் மாடலிங் துறையில் கால் பதித்த இவர், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அதன்பின்னர் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், சீரியலில் நடிக்க துவங்கினார்.

ஏற்கனவே கனாகாணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் மதன். இவரும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்தார். இந்நிலையில், இந்த ஜோடி ஒருவரை ஒருவர் காதலை வெளிப்படுத்தியதால், காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். இதனை அவர்கள் இருவரும் வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். காதல் திருமணம் என்றாலும் இருவர் வீட்டிலும் பெற்றவர்களின் சம்மதம் இவர்களின் காதலுக்குக் கிடைத்தது.

reshma news

தொடர்ந்து மே மாதம் திருமணம் இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. கொரோனா இரண்டாவது அலையின் ஊரடங்குக் காரணமாக அப்போது தள்ளிப் போடப்பட்ட நிலையில், இன்று காலை (நவ.15) சென்னை மதுரவாயலில் உள்ள பிரபலமான ஷூட்டிங் ஸ்பாட்டான எஸ்.பி.பி. கார்டனில் இவர்களது திருமணம் எளிமையாக நடந்தது.

திருமணத்தில் மதன் மற்றும் ரேஷ்மா வீட்டினர் மற்றும் இரண்டு தரப்பிலிருந்தும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த காதல் தம்பதிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மதன் மற்றும் ரேஷ்மா இவர்கள் இருவரும் தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் சீரியலில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

newstm.in


Tags:
Next Story
Share it