நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகைக்கு திருமணம்.. பிரபலங்கள் வாழ்த்து.. வீடியோ !!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகைக்கு திருமணம்.. பிரபலங்கள் வாழ்த்து.. வீடியோ !!

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகைக்கு திருமணம்.. பிரபலங்கள் வாழ்த்து.. வீடியோ !!
X

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மி ஜெயராஜ். கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகளுடன் சீரியல் படப்பிடிப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டது.

எனினும், அதில் நடிக்கும் வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள் சென்னைக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டன. அந்த வகையில் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலும் நிறுத்தப்பட்டது. பின்னர் அதன் இரண்டாம் பாகமான ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியல் தொடங்கப்பட்டது.

சமீபத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 செட்டுக்கு ராஷ்மி ஜெயராஜ் வந்தார். அது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருந்தார். இதனால் ராஷ்மி மீண்டும் இந்த தொடரில் இணைகிறாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால்,ராஷ்மிக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு அழைப்பிதழ் கொடுக்கவே அவர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததாக சக நடிகர்கள் கூறினர். இந்த நிலையில், ராஷ்மி ஜெயராஜூக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அதற்கான வீடியோ வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது.

பு

துமண தம்பதிக்கு சின்னத்திரை ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in


Tags:
Next Story
Share it