மகளுக்கே திருமணமான நிலையில், வேறொரு திருமணம் செய்த மோசடி பெண்!!
மகளுக்கே திருமணமான நிலையில், வேறொரு திருமணம் செய்த மோசடி பெண்!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கதிரவன் (38) திருமணத்திற்கு பெண் தேடிவந்துள்ளார். அப்போது அவருக்கு நெல்லையைச் சேர்ந்த தில்லை துரைச்சி என்பவரது அறிமுகம் கிடைத்தது.
அப்போது அவர் தனக்கு தெரிந்த பெண் ஒருவர் இருப்பதாக கதிரவனிடம் கூறியுள்ளார். இதையடுத்து தில்லைதுரைச்சி கதிரவனுக்கு கவிதா என்ற பெண்ணை அறிமுகம் செய்துவைத்தார்.
இதையடுத்து இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திடீரென கவிதா மற்றும் தில்லை துரைச்சி ஆகிய இருவரையும் காணவில்லை. மேலும் வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகையும் மாயமானது.

இதனால் அதிர்ச்சியடைந்த கதிரவன் இருவரையும் பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்து விசாரணை செய்தபோது அதிர்ச்சி தகவல் வெளியானது. கதிரவனை திருமணம் செய்த கவிதாவிற்கு எற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதில் ஒருவருக்கு திருமணமும் முடிந்துவிட்டது. கவிதா, கதிரவனை திருமணம் செய்து அவரது நகை மற்றும் பணத்தை மோசடி செய்தது விசாரணையில் வெளிவந்துள்ளது.
இதையடுத்து இருவரையும் போலிஸார் கைது செய்து, இவர்கள் வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in

