Theme Check

கொலம்பிய வீராங்கனையிடம் போராடி வீழ்ந்த மேரி கோம்..!!

கொலம்பிய வீராங்கனையிடம் போராடி வீழ்ந்த மேரி கோம்..!!

கொலம்பிய வீராங்கனையிடம் போராடி வீழ்ந்த மேரி கோம்..!!
X

டோக்கியோவில் கடந்த ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடைபெறும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் கொலம்பியா வீராங்கனை விக்டோரியா வேலன்சியாவை எதிர்கொண்டார்.இதில் இந்தியாவின் மேரி கோமை 3-க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி கொலம்பியாவின் விக்டோரியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்தத் தோல்வியின் மூலம் மகளிர் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பறிபோனது. மேரி கோமை வென்ற வெலன்சியா 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it