'மசாஜ் செய்தால் உடல்வலி தீரும்' முதியவரிடம் ரூ.75 ஆயிரம் அபேஸ் செய்த கும்பல்..
'மசாஜ் செய்தால் உடல்வலி தீரும்' முதியவரிடம் ரூ.75 ஆயிரம் அபேஸ் செய்த கும்பல்..

சென்னை ராயபுரம், அப்பர் லேன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (63). இவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசிய இளம்பெண், ‘‘ஹவாய் கிளப் என்ற பொழுதுபோக்கு கிளப்பில் இருந்து பேசுகிறோம். தங்களுக்கு முதுகுவலி, உடல் வலி இருந்தால் எங்கள் நிறுவனத்தின் பேக்கேஜ் முறையில் குறைந்த செலவில் மசாஜ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவ்வாறு மசாஜ் செய்தால் உடல்வலி உடனே தீரும்,’ என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் கூறிய இடத்திற்கு கிருஷ்ணமூர்த்தி சென்றுள்ளார்.
அங்கு, முதியவர் மஜாஜ் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரது டெபிட் கார்டை பெற்று, ரூ.7,500 கட்டணம் வசூலித்துள்ளனர். பின்னர், அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவருக்கு தெரியாமல், அவரது டெபிட் கார்டில் இருந்து ரூ.75 ஆயிரத்தை மசாஜ் சென்டரில் எடுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்தவர்கள் தப்பியது தெரிந்தது.
newstm.in


