Theme Check

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனுக்கு படப்பிடிப்பில் காயம் !

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனுக்கு படப்பிடிப்பில் காயம் !

மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனனுக்கு படப்பிடிப்பில் காயம் !
X

ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன்பின்னர் விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இதனால் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்துவிட்டார். இப்படத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

malavika mohan

அதேபோல், இந்தியில் தயாராகும் யுத்ரா படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இதில் மாளவிகா மோகனனுக்கும் சண்டை காட்சிகள் உள்ளன. இதனால் மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கினர்.

இதற்காக அங்கு படக்குழுவினர் சண்டைக்காட்சிக்காக செட் அடைத்திருந்தனர். அங்கு சண்டைக்காட்சிகள் படமாக்கும் போது நடிகை மாளவிகா மோகனனுக்கு எதிர்பாராமல் அடிபட்டு கையில் காயம் ஏற்பட்டது‌. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it