Theme Check

திருமணமாகியும் திருந்த மாட்டியா..?: கண்டித்த அக்கா.. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு..!

திருமணமாகியும் திருந்த மாட்டியா..?: கண்டித்த அக்கா.. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு..!

திருமணமாகியும் திருந்த மாட்டியா..?: கண்டித்த அக்கா.. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு..!
X

சென்னை ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் விஜயன் (29) கால் டாக்சி ஓட்டுநரான இவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், புது மாப்பிள்ளையான விஜயன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு தனது அக்கா வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளார். விருந்துக்கு சென்ற இடத்திலும் மது போதையில் தள்ளாடியுள்ளார்.

இதையடுத்து, ‘திருமணம் ஆகியும் இன்னும் மது பழக்கத்தை விடவில்லையா..?’ என்று விஜயனின் அக்கா கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவர், தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், படுக்கை அறைக்கு சென்று கதவை உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டார்.

வெகு நேரமாகியும் விஜயன் வெளியே வராததால் அவருடைய உறவினர்கள் கதவைத் தட்டி உள்ளனர். கதவு திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அவர் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர், விஜயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
Share it