Theme Check

மெக்டொனால்டு கடைக்கு சீல்!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

மெக்டொனால்டு கடைக்கு சீல்!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!

மெக்டொனால்டு கடைக்கு சீல்!! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!
X

அகமதாபாத்தில் மெக்டொனால்டு நிறுவனத்தின் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடைக்கு தனது நண்பர்களுடன் பார்கவ் ஜோஷி என்ற இளைஞர் சென்றுள்ளார். அப்போது, அவரகள் பர்கர்கள் மற்றும் கோகோகோலாவை ஆர்டர் செய்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களுக்கு பரிமாறப்பட்ட கோகோகோலாவை குடித்துக் கொண்டிருக்கும்போது பல்லி ஒன்று இறந்த நிலையில் குளிர்பானத்தில் மிதந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பார்கவ், உடனடியாக தனது செல்போனில் பல்லி குளிர்பானத்தில் மிதப்பதை வீடியோவாக பதிவேற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

McDonald

இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தில் பார்கவ் புகார் அளிக்க, மெக்டொனால்டு கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நகராட்சி அலுவலகத்தின் அனுமதியின்றி மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மெக்டொனால்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தரம், சேவை, தூய்மை மற்றும் மதிப்பு ஆகியவை எங்கள் வணிக நடவடிக்கைகளின் மையத்தில் உள்ளன. எங்களின் அனைத்து மெக்டொனால்டு உணவகங்களிலும் 42 கடுமையான பாதுகாப்பு மற்றும் சுகாதார நெறிமுறைகள் அமலில் உள்ளன.


இதில் வழக்கமான சமையலறை மற்றும் உணவகத்தை சுத்தம் செய்தல் மற்றும் சுத்தப்படுத்துதல் போன்ற கடுமையான செயல்முறைகள் அடங்கும். அகமதாபாத் கடையில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். பலமுறை சரிபார்த்ததில் எந்த தவறும் நடைபெறவில்லை. நாங்கள் ஒரு நல்ல கார்ப்பரேட் நிறுவனமாக அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it