Theme Check

19 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம்... நீரஜ் சோப்ராவுக்கு குவியும் வாழ்த்து!!

19 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம்... நீரஜ் சோப்ராவுக்கு குவியும் வாழ்த்து!!

19 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம்... நீரஜ் சோப்ராவுக்கு குவியும் வாழ்த்து!!
X

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

18ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது.

இதனிடையே, நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.38 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில், இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது.

neeraj 1

அதில், பங்கேற்ற வீரர் நீரஜ் சோப்ரா தனது 4ஆவது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2ஆவது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை. வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

neeraj 1

நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, எங்கள் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் ஒருவரால் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப்பில் வரலாற்று சிறப்புமிக்க வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா விளையாட்டுக்கு இது ஒரு சிறப்பு வாய்ந்த தருணம். நீரஜ்சோப்ராவின் இனிவரும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it