Theme Check

தமிழகத்தை சேர்ந்த 20 போலீசாருக்கு பதக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்தை சேர்ந்த 20 போலீசாருக்கு பதக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்தை சேர்ந்த 20 போலீசாருக்கு பதக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு..!
X

குடியரசு தினத்தையொட்டி தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 939 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 20 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று (ஜன.26-ம் தேதி) சிறந்த பணிக்கான பதக்கங்கள், மாநில போலீஸ் அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பதக்கம் பெறும் போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில், ஜனாதிபதியின் பாராட்டத்தக்க பணிக்கான பதக்கம் 88 பேருக்கும், வீரதீர செயல்களுக்கான காவல் பதக்கம் 189 பேருக்கும், தகைசால் பணிக்கான காவல் விருது (பிஎம்) 662 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த 20 போலீஸ் அதிகாரிகளுக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it