Theme Check

மருத்துவ பரிசோதனை முடிந்தது.. சென்னை திரும்பிய ரஜினிக்கு உற்சாக வரவேற்பு !!

மருத்துவ பரிசோதனை முடிந்தது.. சென்னை திரும்பிய ரஜினிக்கு உற்சாக வரவேற்பு !!

மருத்துவ பரிசோதனை முடிந்தது.. சென்னை திரும்பிய ரஜினிக்கு உற்சாக வரவேற்பு !!
X

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப்போவதில்லை என அறிவித்த நிலையில், திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு சென்று சிகிச்சை பெற்ற பின் சில நாட்கள் ஓய்வெடுத்து வந்த ரஜினிகாந்த், அவ்வப்போது அங்குள்ள ரசிகர்களையும் சந்தித்து வந்தார். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. கிச்சை பெறும் மயோ க்ளீனிக்கில் இருந்து தனது மகள் ஐஸ்வர்யாவுடன் நடிகர் ரஜினிகாந்த் நடந்துவரும் புகைப்படம் சமூக ஊடகத்தில் வெளியானது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார். இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அழைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ பரிசோதனை நல்லபடி முடிந்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரத்தில் டப்பிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் நடிகர் ரஜினி டப்பிங் பணிகளை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it