இன்று முதல் கொரோனா டெஸ்ட் செய்பவர்களுக்கு அனைவருக்குமே மருந்து தொகுப்பு!!
இன்று முதல் கொரோனா டெஸ்ட் செய்பவர்களுக்கு அனைவருக்குமே மருந்து தொகுப்பு!!

இன்று முதல் கொரோனா அறிகுறிகள் இருந்து, டெஸ்ட் எடுக்கும் அனைவருக்குமே மருந்து தொகுப்புகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா 3 வது அலை அசுர வேகம் எடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினசரி இரவு ஊரடங்கும் வார இறுதிகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப் பட்டுள்ளது.

இருந்த போதிலும் கொரோனா சுனாமி அலை போல் பரவி வருகிறது. இதன் அடிப்படையில் நாளை முதல் ஆர்டி.-பிசிஆர் பரிசோதனை செய்பவர்களுக்கு மருந்து தொகுப்பு தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மருந்து தொகுப்பை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆர்டி.-பிசிஆர் பரிசோதனை செய்பவர்கள் அனைவருக்குமே பரிசோதனை முடிவுகள் வரும் முன்னே மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், கொரோனா டெஸ்ட் ரிசல்ட் வரும் வரையில் மருந்துகள் எதுவும் பரிந்துரைக்கப்படாத நிலையில், இன்று முதல் டெஸ்ட் எடுத்த நாளிலேயே மருந்து தொகுப்புகள் வழங்கப்படுகிறது.

