சென்னையில் பரபரப்பு.. பட்டப்பகலில் மீனாவை கட்டிப்போட்டு ரூ.1.32 லட்சம் கொள்ளை..!
சென்னையில் பரபரப்பு.. பட்டப்பகலில் மீனாவை கட்டிப்போட்டு ரூ.1.32 லட்சம் கொள்ளை..!

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த டிக்கெட் கொடுப்பவர் டீக்காராம் மீனா என்பவரை கட்டிப்போட்டு 1.32 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையர்கள் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவான்மியூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து திருவான்மியூர் ரயில்வே காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு, கொள்ளை நடந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

