திருமண நாளில் மனைவி குறித்து உருக்கம்.. உதயநிதி பட இயக்குநருக்கு திரையுலகினர் ஆறுதல் !

திருமண நாளில் மனைவி குறித்து உருக்கம்.. உதயநிதி பட இயக்குநருக்கு திரையுலகினர் ஆறுதல் !

திருமண நாளில் மனைவி குறித்து உருக்கம்.. உதயநிதி பட இயக்குநருக்கு திரையுலகினர் ஆறுதல் !
X

பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த 'கனா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சிறந்த விமர்சனங்களைப் பெற்ற கனா திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது. அதேபோல் சில படங்களில் நடித்துள்ளார்.

இதனையடுத்து அருண்ராஜா காமராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'நெஞ்சுக்கு நீதி' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் ஹிந்தியில் வெளியான 'ஆர்ட்டிகள் 15' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிறது.

arunraja kamaraj

இந்த நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த அருண்ராஜாவின் மனைவி சிகிச்சை பலனின்றி அண்மையில் மரணமடைந்தார். இந்த நிகழ்வு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

தற்போது அவர் உயிரிழந்த சிறிது காலத்தில் திருமண நாள் வந்துள்ளதால் அருண்ராஜா காமராஜ் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் அருண்ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ''திருமண நாள் வாழ்த்துகள் பாப்பி'' என அழுகின்ற எமோஜியை பதிவு செய்துள்ளார். அவருக்கு பதிலளித்த இயக்குநர் ஜான் மகேந்திரன், ''இந்த பதிவுக்கு பின் இருக்கும் வலி... யாருக்குமே வரக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார். அதேபோல் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.



newstm.in

Tags:
Next Story
Share it