Theme Check

ஆண்களே இதுபோன்ற பெண்களிடம் அலர்ட் ஆகுங்க..

ஆண்களே இதுபோன்ற பெண்களிடம் அலர்ட் ஆகுங்க..

ஆண்களே இதுபோன்ற பெண்களிடம் அலர்ட் ஆகுங்க..
X

50க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிப் பணம் பறித்ததாக இளம்பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் ஒடிஷா மாநிலம் கோர்தா என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா பரிதா. இவர் சமூக வலைதளங்கள் மூலமே மிகப்பெரிய மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. அதுவும் ஆண்களை மட்டும் குறிவைத்து எத்ற தகவல் வெளியாகிறது.

ஃபேஸ்புக்கில் தான் ஒரு மருத்துவர், இஞ்சினியர், அழகுக்கலை நிபுணர், ஐடி ஊழியர் என பல பொய்களைக் கூறி தனித்தனியே ஆண்களிடம் அறிமுகமாகிறார். அதன்பின்னர் அவர்களிடம் பழக்கம் எற்பட்டு காதலிப்பது போல் நடித்து பணம், நகையை பறித்துக்கொண்டு தப்புகிறார். இதுதான் இவரது வழக்கமான திட்டம் என போலீசார் கூறுகின்றனர்.

priynaka

குறிப்பாக அதிக பணப்புழக்கத்தில் இருக்கும் ஆண்கள் தான் இவரது டார்க்கெட். இது தொடர்பான மோசடி புகார்கள் குவிந்ததால், ஒடிசா மாநில போலீசார் பொறிவைத்து, பல ஆண் நண்பர்களை ஏமாற்றி அதன் மூலம் பணம் பறித்த பிரியங்கா பரிதாவை கைது செய்துள்ளனர்.

தற்போது கடைசியாக தான் மருத்துவ மாணவி எனக்கூறி இளைஞர் ஒருவரிடம் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவரிடம் காதலிப்பதாக நெருங்கி பழகி அந்த இளைஞரிடம் இருந்து 6.50 லட்சம் ரூபாயை பிரியங்கா பறித்ததாகவும் அந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது நடந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் அப்பெண்ணின் மோசடி லீலைகள் வெளிவந்துள்ளன.

priynaka

இவரால் ஏமாந்த ஆண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. மேலும் போலீசார் இவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

newstm.in


Tags:
Next Story
Share it