Theme Check

பாஜக சார்பில் போட்டியிடும் மெட்ரோ மேன் ஸ்ரீதர்..!

பாஜக சார்பில் போட்டியிடும் மெட்ரோ மேன் ஸ்ரீதர்..!

பாஜக சார்பில் போட்டியிடும் மெட்ரோ மேன் ஸ்ரீதர்..!
X

டெல்லி மெட்ரோ ரயில் கட்டுமானங்களை சிறப்பாக கட்டமைத்து ‘மெட்ரோ மேன்’ என பெயர் பெற்ற ஸ்ரீதர் பாஜக-வில் சார்பில் கேரள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். பொறியியல் படித்து முடித்துவிட்டு, 1954-ம் ஆண்டு இந்திய ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். 1964-ம் ஆண்டு ராமேஸ்வரத்தைத் தாக்கிய பெரும்புயலில் பாம்பன் பாலன் இடிந்து போனது. இதை வெறும் 46 நாட்களில் சீரமைத்து கட்டமைத்ததன் மூலம் நாடு முழுவதும் அவர் அறியப்பட்டார்.அதை தொடர்ந்து மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட பிரமாண்ட கொங்க ரயில் பாதைகளும் இவர் கட்டியது தான். டெல்லியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, அதற்கு தலைமை ஏற்றார் ஸ்ரீதரன். அசாத்தியமான அந்த பணிகளை சிறப்பாக செய்து முடித்து இந்திய அரசின் கவனத்தை ஈர்த்தார்,

மேலும் கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் உலா வரும் மெட்ரோ ரயில் கட்டுமானங்கள் இவர் கட்டியது தான். இதனால் அவருக்கு ‘மெட்ரோ மேன்’ என்கிற அடைமொழி உருவானது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், கட்டுமான பணியாளர்கள் என அனைவரும் இவரை ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதர் என்று அழைக்க தொடங்கினர். ஊடகங்களும் இவரை அவ்வாறே குறிப்பிட்டனர்.

தற்போது 88 வயதாகும் ஸ்ரீதரன், வரும் 21ம் தேதி பாஜக-வில் இணைந்து அரசியலில் கால்பதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்மூலம், விரைவில் நடைபெறவிருக்கும் கேரள சட்டசபை தேர்தலிலும் அவர் போட்டியிடவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. கேரளாவில் தீவிரமாக பரப்புரை பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ள பாஜக, விஜய யாத்திரா என்கிற பிரச்சார பயணத்தை துவங்குகிறது. அதற்கான நிகழ்ச்சியின் போது ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் பாஜக-வில் இணைவார் என தெரிய வருகிறது.


Tags:
Next Story
Share it