எம்.ஜி.ஆர் மலையாளி.. ஜெயலலிதா பிராமணர்.. தொண்டர்களை விரட்டியடித்த அமைச்சர் செல்லூர் ராஜு!!
மதுரையில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு, பேசும் போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாதனைக்கு மேல் சாதனை செய்கிறார். அவரை சாதாரணமாக எடை போட்டு விட்டார்கள். அதிமுகவில் 17 லட்சம் தொண்டர்கள் இருக்கும் போதே கருணாநிதியால் கோட்டை பக்கம் வர முடியவில்லை என்றார்.

மதுரையில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு, பேசும் போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாதனைக்கு மேல் சாதனை செய்கிறார். அவரை சாதாரணமாக எடை போட்டு விட்டார்கள். அதிமுகவில் 17 லட்சம் தொண்டர்கள் இருக்கும் போதே கருணாநிதியால் கோட்டை பக்கம் வர முடியவில்லை என்றார். மேலும் ஸ்டாலின் கார்ப்பரேட் கம்பெனியிடம் திமுகவை அடமானம் வைத்து விட்டதாகவும், தமிழக மக்களுக்கு என்ன வேண்டும் என்பது ஒரு பீகாரிக்கு தெரிந்து விடுமா? என்றார்.

ஒரு கட்டத்தில் அவரது பேச்சை கேட்டுக் கொண்டிருந்த தொண்டர்கள் நெளிய துவங்கியதும், தொடர்ந்து பேசிய அவர், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, எல்லா மதத்தையும் அரவணைக்கும் கட்சியாக அதிமுக இருக்கிறது. எம்.ஜி.ஆர் மலையாளியாக இருந்தாலும் கட்சியை ஒன்றரை கோடி தொண்டர்கள் தூக்கி நிறுத்தி இருக்கிறோம். அதே போல ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும் அவரை திராவிட கட்சியின் தலைவராக ஏற்றுக் கொண்டோம் என்று மேலும் பரபரப்பாகப் பேசினார்.
இந்த ஆளு எதையாவது உளறிக் கொட்டி, இருக்கிற தொண்டர்களையும் விரட்டி விட்டுடுவாரு போல’ என்று முணுமுணுத்தப்படியே பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தொண்டர்கள் டீக்கடையையோ, டாஸ்மாக்கையோ நோக்கி கலைந்து சென்றார்கள்.
newstm.in

