Theme Check

Mi 11 X சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்... விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?

Mi 11 X சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்... விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?

Mi 11 X சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்... விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?
X

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் உலகளவில் முன்னணியில் இருக்கின்ற நிறுவனங்களில் ஒன்று சியோமி நிறுவனம். இந்த நிறுவனம் Mi என்ற படைப்புகளில் செல்போன்களை வெளியிட்டு வருகிறது. தற்போது பல நாடுகளில் இந்நிறுவனத்தின் செல்போன்கள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. எனினும் இந்த இரு மாடல்களும் இந்தியாவில் இன்னும் அறிமுகமாகவில்லை. அடுத்தவாரம் அதாவது ஏப்ரல் 27ஆம் தேதி தான் இந்திய சந்தைகளில் கிடைக்கும்.

எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஆகிய இரு மாடல்களிலும் 6.67 இன்ச் E4 AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 20 எம்பி செல்பி கேமரா மிக சிறிய பன்ச் ஹோலில் வழங்கப்பட்டு இருக்கிறது.


எம்ஐ 11 எக்ஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது. எம்ஐ 11 எக்ஸ் மாடலில் 48 எம்பி பிரைமரி கேமரா, எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் 8 எம்பி அல்ட்ரா வைடு 5 எம்பி டெலிபோட்டோ மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 4520 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடல்கள் செலஸ்டியல் சில்வர் மற்றும் லூனார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. எம்ஐ 11 எக்ஸ் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 29,999, 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 31,999 என்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 39,999, 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it