பால் நிறுவனம் அதிரடி… லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு..!
பால் நிறுவனம் அதிரடி… லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு..!

குஜராத் மாநில கூட்டுறவு நிறுவனமான அமுல், பால் மற்றும் பால் பொருட்களை நாட்டின் பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அனைத்து வகையான பாலின் விலையையும் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது.
பேக்கேஜிங் செலவு, போக்குவரத்துச் செலவு, மின்னாற்றல் எரியாற்றல் ஆகியவற்றுக்கான செலவு 30 சதவீதம் அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாக அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த 2 ரூபாய் விலை உயர்வு அமுல் பிராண்ட் கீழ் இருக்கும் அனைத்து பால் வகைகளுக்கும் பொருந்தும், குறிப்பாக கோல்டு, டாசா, சக்தி, டி ஸ்பெஷல், பசும் பால், எருமைப் பால் என அனைத்து பால் வகைகள் மீதும் விலை உயர்வு அமலாக்கம் செய்யப்பட உள்ளது என GCMMF அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள 2 ரூபாயின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் அளிக்கப்படும்.
சுமார் ஒரு வருடம் 7 மாத்திற்கு பின் விலையை உயர்த்தியுள்ள அமுல் நிறுவனம், உற்பத்தி செலவுகள் மிகவும் அதிகரித்துள்ள காரணத்தால் தவிர்க்க முடியாத நிலையில் தற்போது பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும், பேக்கேஜ் செய்யும் செலவுகள் 30 முதல் 40 சதவீதமும், போக்குவரத்து செலவுகள் 30 சதவீதம், எனர்ஜி செலவுகள் 30 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

