Theme Check

அமைச்சர் அன்பரசனின் தாயார் காலமானார்: முதல்வர் நேரில் அஞ்சலி !

அமைச்சர் அன்பரசனின் தாயார் காலமானார்: முதல்வர் நேரில் அஞ்சலி !

அமைச்சர் அன்பரசனின் தாயார் காலமானார்: முதல்வர் நேரில் அஞ்சலி !
X

அமைச்சர் தா.மோ. அன்பரசனின் தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

தமிழக அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக தா.மோ. அன்பரசன் இருக்கிறார். திமுகவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக தொழில் துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசனின் தாயார் ராஜாமணி(83) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு (வியாழக்கிழமை) காலமானார்.

இதனையடுத்து, சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள அமைச்சரின் பூர்வீக இல்லத்தில் ராஜாமணி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து குன்றத்தூரில் இன்று மாலை ராஜாமணியின் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

d

இந்நிலையில், அன்பரசனின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரின் தாயார் ராஜாமணியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டு, அமைச்சர் அன்பரசனுக்கு ஆறுதல் கூறினார்.

முதல்வருடன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

newstm.in

Next Story
Share it