Theme Check

விரைவில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி..!!

விரைவில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி..!!

விரைவில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி..!!
X

சென்னையில் கடந்த 2013-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ‘அம்மா உணவகம்’ என்ற பெயரில் ஏழை, எளிய மக்களுக்குக்காக குறைந்த விலை உணவகம் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வார்டு ஒன்றுக்கு தலா 2 உணவகம், அரசு மருத்துவமனைகளில் 7 என மொத்தம் 407 இடங்களில் திறக்கப்பட்டது. இவற்றின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பசியாறி வருகின்றனர்.

இந்நிலையில், பேரூராட்சி பகுதிகளில் விரைவில் ‘கலைஞர் உணவகம்’ திறக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து இன்று டெல்லியில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டார்.

பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.சக்கரபாணி கூறியதாவது, உணவுத்துறைக்கான ரூ.2 ஆயிரம் கோடி மானியத்தை விடுவிக்க மத்திய உணவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம். தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பேரூராட்சி பகுதிகளில் விரைவில் ‘கலைஞர் உணவகம்’ திறக்கப்படும். அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என தெரிவித்துள்ளார்.

Next Story
Share it