Theme Check

மேடையிலேயே சரிந்துவிழுந்த அமைச்சர் ! பெரும் பரபரப்பு !!

மேடையிலேயே சரிந்துவிழுந்த அமைச்சர் ! பெரும் பரபரப்பு !!

மேடையிலேயே சரிந்துவிழுந்த அமைச்சர் ! பெரும் பரபரப்பு !!
X

மத்திய பிரதேச மின்சார துறை அமைச்சர் பிரதுமன் சிங் தோமர் குவாலியரில் உள்ள தேசிய தோட்டக்கலை வாரிய அலுவலகத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று பேசினார். இந்நிகழ்வில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவாராக பேசினர். பின்னர் மத்திய பிரதேச அமைச்சர் பிரதுமன் சிங் தோமர் பேசும் நேரம் வந்தது. அப்போது, அமைச்சர் பிரதுமன் சிங் தோமர் தனது இருக்கையில் இருந்து மைக் நோக்கி நடந்தார். அப்போது திடீரென தடுக்கி மேடையிலேயே கீழே விழுந்துவிட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர் அமைச்சர் பிரதுமன் சிங் தோமர், அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக போபாலுக்கு புறப்பட்டு சென்றதாக மாவட்ட காவதுறை எஸ்பி அமித் சங்கி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் அமைச்சர் பிரதுமன் சிங் தோமர் மிகவும் பிரபலமானவர். குடியிருப்பு பகுதிகளில் தானாகவே குப்பைகளை அள்ளுவது, சாக்கடையை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் அவ்வப்போது செயல்பட்டு அதிரடி காட்டுவார். அண்மையில் கூட்டம் ஒன்று முடிந்துபோகும்போது, கிராமம் ஒன்றில் மின்பழுது ஏற்பட்டதால் தானே ஏணி மூலம் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it