Theme Check

அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோவில் திடீர் அனுமதி ..!

அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோவில் திடீர் அனுமதி ..!

அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோவில் திடீர் அனுமதி ..!
X

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி முடிவடைந்தது. இதன் இரண்டாவது பகுதி ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு துறைகளின் கீழ் அமைச்சர்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திடீர் காய்ச்சல் காரணமான சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து துரைமுருகன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக இன்று நடைபெறும் அவை நடவடிக்கையில் துரைமுருகன் பங்கேற்கவில்லை.

இதனிடையே, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Next Story
Share it