கை ஏந்தும் நிலையில் உள்ளோம் - சட்டபேரவையில் அமைச்சர் துரைமுருகன்..!!
கை ஏந்தும் நிலையில் உள்ளோம் - சட்டபேரவையில் அமைச்சர் துரைமுருகன்..!!

சட்டபேரவையில் மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்தைக் கொண்டு வந்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது,
காவிரி பிரச்சினை மகன், பேரன், கொள்ளுப்பேரன் வரை போகுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது. கர்நாடகாவில் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே அணியாக உள்ளனர். அதிமுக தீர்மானம் கொண்டு வந்தபோது எல்லாம் திமுக ஆதரித்தது. திமுகவுக்கும் அதிமுக ஆதரவு அளித்தது. காவிரி பிரச்சினையில் நான் என்ன செய்தேன், நீ என்ன செய்தாய் என்ற வாதத்தை விட்டு விடுவோம்.
உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரவேண்டும் என தீர்ப்பு வழங்கிய பிறகும் கர்நாடகா அணைகட்ட முயற்சிக்கிறது. உச்சநீதிமன்றம் சொன்னதைக் கூட ஒரு மாநில அரசு கேட்க மறுப்பது கூட்டாட்சித்தத்துவத்திற்கு எதிரானது.
தமிழ்நாடு தண்ணீருக்கு கையேந்தும் நிலையில் உள்ளது. நாம் அணை கட்ட அனுமதித்தால் வருங்கால சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
அண்டை மாநிலத்துடன் நல்லுறவு பேணும் அதே நேரத்தில் விட்டுக்கொடுக்கக் கூடாது. மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது. மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதியும் ஒன்றிய அரசு கொடுக்கக் கூடாது என கூறினார்.

