Theme Check

மீண்டும் சிக்கலில் அமைச்சர் ராஜகண்ணப்பன்.. இந்தமுறை தப்ப முடியாது?

மீண்டும் சிக்கலில் அமைச்சர் ராஜகண்ணப்பன்.. இந்தமுறை தப்ப முடியாது?

மீண்டும் சிக்கலில் அமைச்சர் ராஜகண்ணப்பன்.. இந்தமுறை தப்ப முடியாது?
X

திமுக ஆட்சி அமைந்த பிறகு போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ராஜகண்ணப்பன். ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் அண்மையில் ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். பட்டியலின பிரிவைச் சேர்ந்த பி.டி.ஓவை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதிபாகுபாடி காட்டி பொதுஇடத்தில் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வேறு இலக்கா மாற்றப்பட்டது. இந்த நிலையில், பட்டியலின பிடிஓவை அவமதித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

dfsd

புதிய தமிழகம் மற்றும் பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி, பட்டியலின பிடிஓவை அவமதித்து சாதி பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை பரிசீலித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள், எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

newstm.in


Next Story
Share it