Theme Check

மின்வெட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

மின்வெட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

மின்வெட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!
X

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று இரவு திடீர் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்த நிலையில், இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிகுப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு 8 மணியில் இருந்து மின்சாரம் நிறுத்தப்பட்டது. காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டது.

கரூர், புலியூர், காந்திகிராமம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டது.

Power-cut

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சேவுர், குன்னத்தூர், கண்ணமங்கலம், களம்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில் 2 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதேபோல வந்தவாசி, செய்யார், போளூர் ஆகிய பகுதிகளிலும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோணம், பார்வதிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரமாக மின் வெட்டு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.


இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it