Theme Check

லாரி மீது மினிவேன் மோதிய கோர விபத்து: 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

லாரி மீது மினிவேன் மோதிய கோர விபத்து: 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

லாரி மீது மினிவேன் மோதிய கோர விபத்து: 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!
X

ஸ்ரீசைலம் கோயிலுக்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் மினிவேன் வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வந்த மினி வேன் இன்று அதிகாலை ஓய்வுக்காக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது.

இதனால் வாகனம் தலைகுப்புறக் கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்த பக்தர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குர்ஜாலா போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Andhra

இந்த விபத்தில் சிக்கியவர்ளை மீட்டு குர்ஜாலா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிரந்தவர்களின் 9 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து குர்ஜாலா டிஎஸ்பி ஜெய்ராம் கூறும்போது, “விபத்தில் நாராயணபுரம் ரோசம், முக்கென ரமணா, அன்னவரபு கோட்டம்மா, குறிசெட்டி ரமாதேவி, பெத்தராபு லட்சுமி நாராயணா, புலிபாடு கோட்டேஸ்வரம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. டாடா ஏஸ் ஓட்டுநர் உறங்கியதால் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது” என்று கூறினார்.

accident

சாலை ஓரத்தில் நின்ற லாரி மீது மினிவேன் மோதிய கோர விபத்தில் 9 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it