Theme Check

ஒலிம்பிக் பதக்கத்துடன் தாயகம் திரும்பிய மீராபாய் சானு.. உற்சாக வரவேற்பு !!

ஒலிம்பிக் பதக்கத்துடன் தாயகம் திரும்பிய மீராபாய் சானு.. உற்சாக வரவேற்பு !!

ஒலிம்பிக் பதக்கத்துடன் தாயகம் திரும்பிய மீராபாய் சானு.. உற்சாக வரவேற்பு !!
X

பதக்கத்துடன் தாய்நாட்டுக்கு திரும்பிய வெள்ளி மங்கை மீராபாய் சானுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

mirabhai chanu

இந்நிலையில் அவருக்கான போட்டி முடிந்ததால் மீராபாய் பானு தாயகம் திரும்பினார். ஜப்பானில் இருந்து புறப்பட்ட மீராபாய் சானு இன்று டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார்.

டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனது சொந்த மாநிலமான மணிப்பூர்-க்கு செல்வார் என தெரிகிறது.

இதனிடையே தான் மேற்கொண்ட கடின உழைப்புக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டியது. இப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி தருவதாக மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.


newstm.in


Tags:
Next Story
Share it