Theme Check

150 டிரைவர்களை நெகிழ வைத்த மீராபாய் சானு; என்ன காரணம் தெரியுமா..?

150 டிரைவர்களை நெகிழ வைத்த மீராபாய் சானு; என்ன காரணம் தெரியுமா..?

150 டிரைவர்களை நெகிழ வைத்த மீராபாய் சானு; என்ன காரணம் தெரியுமா..?
X

வீட்டில் இருந்து பயிற்சி மையம் செல்ல லிப்ட் கொடுத்து உதவிய லாரி ஓட்டுநர்கள் 150 பேரை நேரில் வரவழைத்து, அவர்களுக்கு உணவு மற்றும் பரிசுகள் வழங்கி உபசரித்தார் மீராபாய் சானு.

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு. இவர், தான் கஷ்டப்படும் காலத்தில் வீட்டில் இருந்து பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்று உதவிய மணல் லாரி ஓட்டுநர்களை நேரில் அழைத்து நன்றி தெரிவித்து உபசரித்தார்.

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மீராபாய் சானு. இவர், தனது கிராமத்தில் இருந்து இம்பாலில் உள்ள பயிற்சி மையத்திற்கு வருவதற்கு போதிய அளவு பணம் இல்லாததால், அவ்வழியாக வரும் மணல் லாரிகளில் லிப்ட் கேட்டு பயணித்து பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதை அடுத்து, தனக்கு உதவிய சுமார் 150 லாரி ஓட்டுநர்களை நேரில் அழைத்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். அத்துடன். அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, மத்திய உணவும் அளித்து உபசரித்தார்.

Tags:
Next Story
Share it