மிஸ் பண்ணாதீங்க! 4,688 மையங்கள்.. 1,900 மினி கிளினிக்குகள்! இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி!
மிஸ் பண்ணாதீங்க! 4,688 மையங்கள்.. 1,900 மினி கிளினிக்குகள்! இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி!

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசும், மாநில அரசுகளும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழகம், மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், பஞ்சாப்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் இன்று (01.04.2021) முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதற்காக 4,688 மையங்கள், 1,900 மினி கிளினிக்குகள் என 6,588 இடங்களில் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

