Theme Check

மீண்டும் ஏவுகணை சோதனை.. போர்-க்கு மத்தியில் வடகொரியா செயலால் அதிகரித்த பதற்றம் !!

மீண்டும் ஏவுகணை சோதனை.. போர்-க்கு மத்தியில் வடகொரியா செயலால் அதிகரித்த பதற்றம் !!

மீண்டும் ஏவுகணை சோதனை.. போர்-க்கு மத்தியில் வடகொரியா செயலால் அதிகரித்த பதற்றம் !!
X

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் வட கொரியா நேற்று மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டதால் ரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார தடைகளை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. எனினும் கடந்த ஒரு மாதமாக அந்த சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே உக்ரைன் - ரஷ்யா இடையே கடும் போர் நிலவி வருவதால் உலக நாடுகளின் கவனம் வட கொரியாவை விட்டு விலகியது.

இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் வட கொரியா அறிக்கை வெளியிட்டது. ரஷ்யா- உக்ரைன் போருக்கு காரணமே அமெரிக்கா தான் என குற்றம்சாட்டியது. இந்த பரபரப்புக்கு மத்தியில் வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நேற்று நடத்தி உள்ளது.

north koria weapen

இந்த ஆண்டு வட கொரியாவால்நடத்தப்பட்டுள்ள எட்டாவது ஏவுகணை சோதனை இது.நிலத்தில் இருந்து செலுத்தப்பட்ட அந்த ஏவுகணை 300 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்று வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் விழுந்தது. ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாகவும் இதனால் கப்பல் விமானம் என எதும் சேதமடையவில்லை என்றும் ஜப்பான் ராணுவ அமைச்சர் நோபுயோ கிஷி தெரிவித்தார்.

இதை தென் கொரிய ராணுவமும் நேற்று உறுதிபடுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனை பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it