2014ல் மிஸ்சிங்.. 2020 வரை பின்தொடர்ந்த பகை... திமுக பிரமுகர் வெட்டி படுகொலை
2/14ல் மிஸ்சிங்.. 20120 வரை பின்தொடர்ந்த பகை... திமுக பிரமுகர் வெட்டி படுகொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். மன்சூர் அலி(49) என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இவர் நேற்றிரவு 7 மணியளவில் ஓசூர் காமராஜ் காலனி விளையாட்டு மைதானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது, 2 பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மன்சூர் அலியை வெட்டியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு நடைபயிற்சி சென்றவர்கள் ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பெற்றச்செய்தனர். ஏற்கனவே 2014 ஜூன் மாதம் இவரையும் ஜான்பாஷா என்பவரையும் ஒரு கும்பல் காரில் கடத்தி ஜான்பாஷா குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியது. போலீசார் சுற்றி வளைத்ததால் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு கும்பல் தப்பியது. இதில் ஜான்பாஷா இறந்தார். அப்போது தப்பிய மன்சூர் அலி தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார்.
newstm.in


