Theme Check

அரசின் சின்னங்களை தவறாகப் பயன்படுத்துவதா? எம்.பி.க்கள், அரசு ஊழியர்களுக்கு கடிவாளம் போடும் சென்னை உயர்நீதிமன்றம் !

X

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்துவதாகவும் அதனை தடுக்க உத்தரவிடக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அனைத்து தரப்பு விசாரணையையும் நீதிபதி பதிவு செய்தார். இந்த நிலையில், ஓய்வுபெற்ற பின்னரும் எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட கடைநிலை ஊழியர்களும் அரசின் சின்னங்களை பயன்படுத்துவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். எனவே முன்னாள் எம்.பி.க்கள், அமைச்சர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோர் தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

sylendra_babu_dgp

இதுபோன்ற செயல்பாடுகள் மீது CONSTABLE உள்ளிட்ட அனைத்து காவலர்களும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எவ்வாறு அமல்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனைகளை தமிழக டிஜிபியும், சென்னை மாநகர காவல் ஆணையரும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

newstm.in

Next Story
Share it