MK Stalin criticize CM Edappadi Palanaisami
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி ஊழலுக்காக நடைபெறும் ஆட்சி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி ஊழலுக்காக நடைபெறும் ஆட்சி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் திமுக மூத்த நிர்வாகிகள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளாமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு விழா கொண்டாட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது என வினவினார். பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்ததையும், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், முதலமைச்சர் தன்மீது உள்ள கொலை, கொள்ளை வழக்குகளை மறைக்கவே காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார் என குற்றம்சாட்டினார்.

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது தான் என்றாலும் கூட, இதுகுறித்து மத்திய அரசிடம் ஆலோசிக்கப்பட்டதா, ஏற்கனவே உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை என்ன செய்யப்பபோகிறார்கள் என கேள்விகளுக்கு எல்லாம் அதிமுக அரசு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சி ஊழலுக்காக தான் நடைபெற்று வருகிறது என ஸ்டாலின் கடுமையாக சாடினார்.
newstm.in

