எடப்பாடிக்கு அடைமொழி பட்டம் கொடுத்த மு.க.ஸ்டாலின்!!
எடப்பாடிக்கு அடைமொழி பட்டம் கொடுத்த மு.க.ஸ்டாலின்!!

“அண்ணா என்னை விட்டுடுங்க” என்று ஒரு பெண் கதறியதை பார்த்து துடித்துப் போனோமே, அந்த பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றவர் தான் இந்த பச்சைப் பொய் பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
துாத்துக்குடியில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளி வாயிலாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தி.மு.க., ஆட்சியின் எட்டு மாத காலத்தில், இதுவரை ஐந்து அனைத்து கட்சி கூட்டங்களை, இந்த அரசு நடத்தி இருக்கிறது என்றார்.
சட்டசபையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை விட, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அதிக நேரம் பேசுகின்றனர்.
சட்டசபையில் கருத்துகளை சொல்வதற்கு முழுமையாக, அவர்களுக்கு நேரம் தரப்படுகிறது. இதை விட ஜனநாயகம் வேறு எங்கே இருக்க முடியும் என்று வினவினார்.

என்னை சர்வாதிகாரி என சொல்லிய பழனிசாமி, நான் பொம்மை என்றும் சொல்லி இருக்கிறார். இப்படி வாய்க்கு வந்ததை பேசி இருக்கிறார். மக்கள் கொடுத்த தோல்வியால், அவருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
'அ.தி.மு.க., ஆட்சியின்போது பொங்கலுக்கு, 5,000 ரூபாய் கொடுக்க சொன்னார் ஸ்டாலின், இப்போது, 100 ரூபாய் கூட கொடுக்கவில்லை' என, பழனிசாமி பேசி இருக்கிறார். நான் 5,000 ரூபாய் கொடுக்கச் சொன்னது, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு தான்.

தி.மு.க., ஆட்சி மலர்ந்த உடனேயே, 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டை தாரர்களுக்கும் இருதவணைகளில், 4,000 ரூபாய் வழங்கி விட்டோம். ஆனாலும், திசை திருப்பும் பொய்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார், 'பச்சைப் பொய்' பழனிசாமி என்று முதல்வர் கடுமையாக விமர்சித்தார்.
newstm.in

