Theme Check

“மு.க.ஸ்டாலின் தான் இன்ஸ்பிரேஷன்” – சேவை செய்ய வேலையை உதறிய ஐ.ஏ.எஸ் அதிகாரி!!

“மு.க.ஸ்டாலின் தான் இன்ஸ்பிரேஷன்” – சேவை செய்ய வேலையை உதறிய ஐ.ஏ.எஸ் அதிகாரி!!

“மு.க.ஸ்டாலின் தான் இன்ஸ்பிரேஷன்” – சேவை செய்ய வேலையை உதறிய ஐ.ஏ.எஸ் அதிகாரி!!
X

தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலினை போல் சேவை செய்ய விரும்புவதாக கூறி தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜூ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜு தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். அவருக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பணி இருந்தது. அவர் சொந்த மாநிலமான பஞ்சாபில் அரசியலில் நுழைய வாய்ப்பு உள்ளது.

அவர் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், தனது சொந்த மாநிலத்தின் வேதனை நிறைந்த சூழ்நிலைகளை தனது மனசாட்சி எடைபோடுவதாகவும், அதனால் அங்கு சென்று தங்களைப் போல சேவை செய்ய விரும்புகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளார்.

stalin

தனது வாழ்க்கை சீக்கிய குருக்களின் போதனைகளாலும், அண்ணல் அம்பேத்கர், பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் திரும்பி வாழ்நாள் முழுவதும் மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ராஜினாமா செய்ததன் மூலம், அந்த அதிகாரி சமீப ஆண்டுகளில், பல்வேறு காரணங்களுக்காக விஆர்எஸ் தேர்வு செய்த தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளின் பட்டியலில் இணைந்துள்ளார்.

Jagmohan-Singh-Raju 1

சேவையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கான அவரது கோரிக்கையை பரிசீலித்த பின்னர், அகில இந்திய சேவைகளின் விதி 16 (2) இன் கீழ் ஜனவரி 27 பிற்பகல் முதல் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it