Theme Check

திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!!
X

ஆங்கிலத்துக்கு மாற்றாக இணைப்பு மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநில உரிமை மற்றும் மொழி உரிமை காக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மாநில உரிமை, மொழி உரிமை காக்க கண்ணும் கருத்துமாக திமுகவினர் தொடர்ந்து பாடுபடுவோம். தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம், அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம். இந்திய ஒன்றியத்தில் எவராலும் தவிர்க்க முடியாத இயக்கம் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்போம். தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகிய மூன்றின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு திமுக பயணிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Next Story
Share it