Theme Check

பாஜகவில் இணைந்தார் எம்எல்ஏ வேல்முருகனின் முன்னாள் மனைவி !!

பாஜகவில் இணைந்தார் எம்எல்ஏ வேல்முருகனின் முன்னாள் மனைவி !!

பாஜகவில் இணைந்தார் எம்எல்ஏ வேல்முருகனின் முன்னாள் மனைவி !!
X

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகனின் முன்னாள் மனைவி பாஜகவில் இணைந்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமாக வேல்முருகன் உள்ளார். இவர் பாமகவில் இருந்து தனியாக பிரிந்து புதியக்கட்சி தொடங்கி தனியாக செயல்பட்டு வருகிறார். பாமகவுக்குஎதிரான நிலைபாடு கொண்டவர்.

இந்த நிலையில், வேல்முருகன் தனது மனைவி காயத்ரியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இவர்களுக்கு, விவாகரத்து ஆகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் காயத்ரி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

S

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான காமலாலயத்தில், அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் காயத்ரி பாஜகவில் இணைந்தார். அவருக்கு மாநில தலைவர் அண்ணாமலை உறுப்பினர் அட்டையை வழங்கி பாஜகவுக்கு வரவேற்றார். சமீப நாட்களில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளின் உறவினர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். கடந்த வாரம் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி. பாஜகவில் இணைந்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it