Theme Check

மக்கள் கூட்டத்தில் புகுந்தது எம்எல்ஏ கார்.. 7 போலீசார் உட்பட 22 பேர் காயம்..!

மக்கள் கூட்டத்தில் புகுந்தது எம்எல்ஏ கார்.. 7 போலீசார் உட்பட 22 பேர் காயம்..!

மக்கள் கூட்டத்தில் புகுந்தது எம்எல்ஏ கார்.. 7 போலீசார் உட்பட 22 பேர் காயம்..!
X

ஒடிசா மாநிலம் குர்தா மாவட்டத்தில், பாஜக எம்எல்ஏ பிரசாந்த் ஜக்தேவ் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் எம்எல்ஏ பிரசாந்த் ஜக்தேவை கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்தில் 7 போலீசார் உட்பட 22 பேர் காயமடைந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 injured as BJD MLA rams car in Odisha | MyNewsNE English
பானாபூர் தொகுதி மேம்பாட்டு அலுவலகத்திற்கு வெளியே பாஜக ஆதரவாளர்கள் உட்பட ஏராளமானோர் திரண்டிருந்தபோது, எம்எல்ஏ பிரசாந்த் ஜக்தேவ் கார் மக்கள் மீது மோதியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில், எம்எல்ஏ பிரசாந்த் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Watch] Odisha MLA's car ploughs into crowd injuring many; irate locals  thrash legislator
மேலும், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் குர்தா எஸ்பி அலேக் சந்திரா பதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எம்எல்ஏவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் பிருத்விராஜ் ஹரிச்சந்திரா வலியுறுத்தியுள்ளார்.

Next Story
Share it