Theme Check

நடமாடும் நகைக்கடை மனிதர் தற்கொலை..!

நடமாடும் நகைக்கடை மனிதர் தற்கொலை..!

நடமாடும் நகைக்கடை மனிதர் தற்கொலை..!
X

கழுத்திலும், கைகளிலும் கிலோக் கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு உலா வந்தவர் தற்கொலை செய்து கொண்டார். ‘நடமாடும் நகைக் கடை மனிதர்’ எனப் புகழப்படும் இவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் குஞ்சால் பட்டேல். கழுத்திலும், கைகளிலும் கிலோக் கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு உலா வந்த இவரை, ‘நடமாடும் நகைக் கடை’ என குஜராத் மக்கள் புகழ்ந்து, ஆச்சரியத்துடன் பார்த்து வந்தனர்.

கடன் தொகையை சரிவர கட்டாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் தொழியில் ஈடுபட்டு வந்த குஞ்சால் பட்டேல், அகமதாபாத்தின் மாதோபுரா பகுதியில் உள்ள அவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரின் வீட்டுக்கு விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முன்னதாக குஞ்சால் பட்டேலுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் தற்கொலை முடிவை மேற்கொண்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags:
Next Story
Share it