மாடர்னா ஒற்றை டோஸ் தடுப்பூசி.. கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் புதிய ஆயுதம் !!

மாடர்னா ஒற்றை டோஸ் தடுப்பூசி.. கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் புதிய ஆயுதம் !!

மாடர்னா ஒற்றை டோஸ் தடுப்பூசி.. கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் புதிய ஆயுதம் !!
X

கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆயுதம் தடுப்பூசி என்ற மந்திரச்சொல் இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடந்துகொண்டு இருக்கிறது. இதுவரை இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் செயல்முறையில் உள்ளன. இந்தியாவின் சில பகுதிகளில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதால் மேலும் வெளிநாட்டு தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனமான மாடர்னா அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்கட்டமாக அந்நிறுவனம் தற்போது 5 கோடி டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்காக சிப்லா மற்றும் மற்றொரு மருந்து நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

மாடர்னா குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் அதன் தடுப்பூசி குழந்தைகளுக்கு 100% பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட முடிவுகளுக்குப் பிறகு, தடுப்பூசி உற்பத்தியாளரான மாடர்னா, ஜூன் மாதத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு ஒப்புதல் பெற அமெரிக்க ஒழுங்குமுறை அமைப்பான எஃப்.டி.ஏ-வை அணுகப்போவதாக கூறியுள்ளது.

பாரத் பயோடெக் (Bharat Biotech) நிறுவனமும் குழந்தைகளுக்கு நாசி வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. இதற்கான சோதனை தொடங்கி விட்டது. நாசி ஸ்ப்ரே தடுப்பு மருந்தின் 4 சொட்டுகளே கொரோனாவை வெல்வதில் திறம் மிக்கதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தடுப்பு மருந்தை இரண்டு நாசி துவாரங்களிலும் இரண்டு சொட்டுகள் விட வேண்டும். அடுத்துவரும் நாட்களில் கொரோனாவுக்கு எதிரான இந்த தடுப்பு மருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it