Theme Check

பிரபல பாடகர் மீது வழக்கு..!

பிரபல பாடகர் மீது வழக்கு..!

பிரபல பாடகர் மீது வழக்கு..!
X

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாக பேசிய பிரபல பாடகர் மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலும், உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலும் பாஜக ஆட்சி நடக்கிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாடகர் நவாஸ் செரீப் சமீபத்தில் மத்திய பிரதேசத்தின் ரேவா நகருக்கு வந்திருந்தார்.
FIR registered against Qawwal Sharif, police team from MP sent to UP to  arrest Nawaz - Edules
அப்போது அவர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக பேசியிருந்தார்.

அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. செரீபின் கருத்துக்கு ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைப் பார்த்த மபியின் மங்க்வா நகரை சேர்ந்த சிலர் போலீசில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாடகர் நவாஸ் செரீபை கைது செய்ய உத்தரப் பிரதேசம் சென்றுள்ளனர்.

Next Story
Share it