Theme Check

இன்று சென்னை வருகிறார் மோடி! புதுவையில் ரூ.491 கோடி செலவில் புது திட்டங்கள்!

இன்று சென்னை வருகிறார் மோடி! புதுவையில் ரூ.491 கோடி செலவில் புது திட்டங்கள்!

இன்று சென்னை வருகிறார் மோடி! புதுவையில் ரூ.491 கோடி செலவில் புது திட்டங்கள்!
X

புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று (25.02.2021) சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 11.20 மணியளவில் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடைகிறார்.

அங்கு அவரை புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்கின்றனர். வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடி கோரிமேடு ஜிப்மர் கலையரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார்.

அப்போது சதானந்தபுரம்-நாகப்பட்டினம் இடையேயான 4 வழிச்சாலை பணிகளுக்கும், காரைக்காலில் ரூ.491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கட்டுமானம், சாகர்மாலா திட்டம், இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழையினால் ஆன ஓடுதளம், ஜிப்மர் ரத்த மையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் தங்கும் விடுதியையும், புதுவை நகராட்சி கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.

பின்னர் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நடைபெறும் பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

Tags:
Next Story
Share it