Theme Check

30ம் தேதி தமிழகம் வருகிறார் மோடி! புதுவையில் முகாமிடும் பா.ஜ.க தலைவர்கள்!

30ம் தேதி தமிழகம் வருகிறார் மோடி! புதுவையில் முகாமிடும் பா.ஜ.க தலைவர்கள்!

30ம் தேதி தமிழகம் வருகிறார் மோடி! புதுவையில் முகாமிடும் பா.ஜ.க தலைவர்கள்!
X

தமிழகத்திலும், புதுவையிலும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி வருகிற 30ம் தேதி புதுச்சேரி வருகிறார்.

கடந்த மாதம் 25ம் தேதி புதுச்சேரிக்கு வந்திருந்த பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்நிலையில், வருகிற 30ம் தேதி மீண்டும் புதுச்சேரி வரும் பிரதமர் மோடி, AFT மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


புதுவையில் ஆட்சியை பிடித்து விட பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, லாஸ்பேட்டை மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். தற்போது மீண்டும் பிரதமர் மோடி வரும் 30ம் தேதி புதுவை வருகிறார்.

புதுச்சேரி- கடலூர் ரோட்டில் உள்ள ஏஎப்டி திடலில் இம்மாதம் 30ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் அடுத்தடுத்து புதுச்சேரி வருகின்றனர்.

நாளை (22ம் தேதி) நிதின் கட்கரி புதுவை வருகிறார். தமிழகத்தில், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை கெளதமி, இன்று புதுவையில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Tags:
Next Story
Share it